வீடியோ ஸ்டோரி

சந்திர கிரகணம்: இந்தியாவின் அனைத்து இடங்களிலும் காணமுடியும் - புவி அறிவியல் அமைச்சகம்

சந்திர கிரகணம்: இந்தியாவின் அனைத்து இடங்களிலும் காணமுடியும் - புவி அறிவியல் அமைச்சகம்

webteam

நவம்பர் 8 ஆம் தேதி நிகழும் சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் காண முடியும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் கிரகணத்தின் ஆரம்பம் மற்றும் அதனோடு தொடர்புடைய பல்வேறு வடிவு நிலைகளை காண இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி முழு சந்திர கிரகணம், மாலை 3.46 மணிக்கு தொடங்குகிறது. கொல்கத்தா, கவுகாத்தி, டெல்லி, மும்பை, பெங்களூரூ, சென்னை போன்ற நகரங்களில் 18 முதல் 50 நிமிடங்கள் வரை கிரகணத்தை காணமுடியும்.

சென்னையை பொருத்தவரை மாலை 5.39 மணி முதல் தொடர்ந்து 40 நிமிடங்கள் சந்திர கிரகணத்தை காணமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.