வீடியோ ஸ்டோரி

கொடைக்கானல் குறிஞ்சி மலர்களை ஆய்வு செய்ய முன்வந்த பல்கலைக்கழகம்!

கொடைக்கானல் குறிஞ்சி மலர்களை ஆய்வு செய்ய முன்வந்த பல்கலைக்கழகம்!

webteam

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள் குறித்து அன்னை தெரசா பல்கலைக் கழகம் ஆய்வு செய்ய முன்வந்திருப்பதை இயற்கை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு மணிமகுடம் வைத்து அலங்கரிக்கத் தொடங்கியுள்ளது வெண்மை கலந்த நீலநிறத்தில் உள்ள ஓடை குறிஞ்சி மலர்கள். இந்தியாவில் 150-க்கும் மேற்பட்ட வகைகளில் குறிஞ்சி மலர்கள் உள்ளதாகவும், இதில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 61 வகைகள் தென்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு வரை 10 வகை குறிஞ்சி மலர்கள் பற்றி ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது பூக்கும் இந்த மலர்கள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாகவும் கூறினர்.