குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான தீபத்தை நடிகர் ஜாக்கி சான் சீனப்பெருஞ்சுவரில் ஏந்திச் சென்றார்.
சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்க உள்ளன. இதற்கான தீபம் பெய்ஜிங்கில் தொடங்கி சீனாவின் முக்கிய அடையாளங்களை கடந்து செல்கிறது. ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டத்தின் இரண்டாம் நாளில் நடிகர் ஜாக்கிசான், தீபத்தை கையில் ஏந்தி சீனப்பெருஞ்சுவர் பகுதியை கடந்து சென்றார்.
இதற்காக காலை 4 மணிக்கே எழுந்து தயாரானதாகவும் 4ஆவது முறையாக ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி செல்லும் வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.