வீடியோ ஸ்டோரி

வேலூர்: தண்டவாளத்தில் தவறிவிழுந்த கைக்குழந்தை; போராடி காப்பாற்றிய தாய்

வேலூர்: தண்டவாளத்தில் தவறிவிழுந்த கைக்குழந்தை; போராடி காப்பாற்றிய தாய்

நிவேதா ஜெகராஜா

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலைய தண்டவாளத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிக் கொண்ட தாய் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த  பள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராணி(வயது 37). இவர் 9 மாத ஆண் கைக்குழந்தையுடன் காட்பாடி ரயில் சந்திப்பிற்கு ரயிலேற சென்றுள்ளார். அப்போது, நடைமேடையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது குழந்தையை தூக்க தாய் யுவராணி தண்டவாளத்தில் அவசரமாக இறங்கி உள்ளார். அப்போது அந்த வழியே வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் யுவராணி மீது மோதியுள்ளது.

தலையில் பலத்த காயத்துடன் தாய் மற்றும் குழந்தை ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். உடனடியாக ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்தியதை தொடர்ந்து காட்பாடி ரயில்வே போலீஸார் தாய் மற்றும் குழந்தையை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது இருவரும் சி.எம்.சி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில் தண்டவாளத்தில் கைக் குழந்தை மற்றும் தாய் சிக்கி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் வேலூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.