வீடியோ ஸ்டோரி

திருச்சி: பெற்றோரை ஈர்க்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

webteam

திருச்சியில் உயர்தரக் கட்டமைப்புடன் கூடிய அரசு நடுநிலைப் பள்ளியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மேலும் அதிகரித்துள்ளது.

பள்ளியின் நுழைவாயில் முதல் வகுப்பறைகள் வரை உயர்தர கட்டமைப்புடன் காட்சியளிக்கும் இந்த இடம், திருச்சி பீமநகர் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி. வண்ணமயமான சுவர்கள். ஸ்மார்ட் வகுப்பறை, சுகாதாரமான உட்கட்டமைப்புடன் காணப்படும் இப்பள்ளியில், ஏற்கனவே 1200க்கும் அதிகமானோர் படிக்கும்நிலையில், இந்த ஆண்டு புதிதாக 400-க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். கொரோனா காலகட்டமும் இதற்கு ஒரு காரணமாக சொல்கிறார்கள் பெற்றோர்.

அரசுப் பள்ளி குறித்த பொதுமனநிலையை மாற்றும்வகையில் நவீன கற்றல் திறனை மேம்படுத்திவருவதாக கூறுகிறார் பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜராஜேஸ்வரி.

ஏழு லட்சம் ரூபாய் சொந்த செலவில், பள்ளியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்ட ராஜராஜேஸ்வரி, பள்ளிக்காக, உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி கிடைத்தும் அதை தவிர்த்தவர். 2018 ஆம் ஆண்டு புதிய தலைமுறையின் ஆசிரியர் விருதை பெற்றவரான ராஜராஜேஸ்வரி, தங்கள் பள்ளியில் ஆங்கில வழி கல்வியும், ஆங்கிலத்தில் பேசவும் பயிற்சி அளிப்பதாலும் பல பெற்றோர் வேறுபள்ளிகளில் இருந்து தங்கள் பள்ளிக்கு மாறுவதாக கூறுகிறார்.