வீடியோ ஸ்டோரி

குஜராத் டூ கேரளா சைக்கிளில் சென்று தாலி கட்டப்போகும் கோவை மாப்பிள்ளை! எதற்காக தெரியுமா?

குஜராத் டூ கேரளா சைக்கிளில் சென்று தாலி கட்டப்போகும் கோவை மாப்பிள்ளை! எதற்காக தெரியுமா?

webteam

பசுமை இந்தியா குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குஜராத்தில் இருந்து கேரளாவுக்கு, கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மிதிவண்டி பயணம் மேற்கொண்டுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் சிவசூர்யா. குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிவரும் இவருக்கு, குருவாயூர் கோயில் அஞ்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், திருமணத்திற்காக கேரளா செல்லும்போது வழியெங்கும் உள்ள மக்களிடம் பசுமை இந்தியா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சிவசூர்யா விரும்பியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர், குஜராத்தில் இருந்து மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக மிதிவண்டியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி வந்திருக்கிறார். குஜராத் முதல் கோவை வரை 10 நாட்களில் பல்வேறு மாநிலங்களை கடந்து 1902 கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டி பயணம் மேற்கொண்டது சாதனையாக உள்ளது என சிவசூர்யா பெருமிதம் தெரிவித்தார்.