கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் சுமார் மூன்று மணி நேரத்தில் 2 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையாகின.
உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் நடைபெறும் வாரச்சந்தையில் 25 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே ஆடுகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. காலை 7 மணிக்கு தொடங்கிய சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
ஆடு ஒன்று 8 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. எனவே சுமார் 3 மணி நேரத்தில் 2 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.