வீடியோ ஸ்டோரி

கே.சி.வீரமணி வீட்டில் கொட்டிவைக்கப்பட்ட மணல் - ஆட்சியரிடம் கனிமவளத்துறை அறிக்கை

கே.சி.வீரமணி வீட்டில் கொட்டிவைக்கப்பட்ட மணல் - ஆட்சியரிடம் கனிமவளத்துறை அறிக்கை

கலிலுல்லா

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில் 551 யூனிட் மணல் உள்ளது என திருப்பத்தூர் ஆட்சியரிடம் கனிமவளத்துறை அறிக்கை சமர்பித்துள்ளது.

கடந்த 16-ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். இதில், கே.சி.வீரமணியின் வீட்டில் மணல் கொட்டப்பட்டிருப்பது குறித்து கனிமவளத்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் கொடுத்தது. இதையடுத்து, கே.சி.வீரமணி வீட்டிற்குச் சென்ற கனிமவளத்துறை அதிகாரிகள், வீட்டின் பின்புறக் கொட்டிவைக்கப்பட்டுள்ள மணலை அளவீடு செய்தனர். அதில், 551 யூனிட் மணல் இருப்பது தெரியவந்தது.

அதன் மதிப்பு சுமார் ரூ.33 லட்சம் என்று திருப்பத்தூர் ஆட்சியரிடம் கனிமவளத்துறை அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து எதற்காக மணல் கொட்டிவைக்கப்பட்டுள்ளது? அதற்கான உரிய பில் உள்ளிட்டவை உள்ளதா? என விசாரணை நடைபெற உள்ளது. பில் இல்லாத பட்சத்தில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சட்டவிரோத மணல் பதுக்கல் பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.