உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்றிரவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வேடம் அணிந்த பக்தர்கள் ஆடிப்பாடி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
திருச்செந்தூரிலுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நடைபெற்று வருகிறது. கொரோனா பொதுமுடக்க விதிமுறைகள் காரணமாக இந்த ஆண்டும் பக்தர்களின்றி இன்றிரவு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் விரதம் இருக்கும் பக்தர்கள் வேடம் அணிந்து உற்சாகத்துடன் ஆடிப்பாடி வருகின்றனர். இதனால் கோயிலுக்கு வரக்கூடிய அனைத்து பாதைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.