வீடியோ ஸ்டோரி

சிவில் சர்வீஸ் தேர்வில் ஓபிசி-ஐ விட ’EWS’ பிரிவுக்கு கட் ஆஃப் குறைவு

சிவில் சர்வீஸ் தேர்வில் ஓபிசி-ஐ விட ’EWS’ பிரிவுக்கு கட் ஆஃப் குறைவு

கலிலுல்லா

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட பொருளாதாரரீதியாக பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கான கட்ஆஃப் மதிப்பெண் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுபிரிவினருக்கான கட்ஆஃப் மதிப்பெண் 894 ஆக உள்ளது. அதேநேரம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட்ஆஃப் மதிப்பெண் 907 ஆக இருக்கிறது. சிவில் சர்வீஸ் தேர்வின் மூன்று கட்டங்களிலும் அதாவது முதல் கட்டத் தேர்வு, முக்கியத் தேர்வு, இறுதித் தேர்வு ஆகியவற்றில் ஒவ்வொன்றிலுமே பொருளாதாரரீதியாக பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கான கட்ஆஃப் மதிப்பெண்கள் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான மதிப்பெண்களை விட குறைவாகவே உள்ளது.

முதல் கட்ட தேர்வில் பொருளாதாரரீதியாக பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண் 90 என உள்ளது. இது ஓபிசி பிரிவினருக்கு 95.34 ஆக உள்ளது. இதுபோலவே முக்கியத் தேர்வு மற்றும் இறுதித் தேர்விலும் பொருளாதாரரீதியாக பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கான மதிப்பெண் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டும் இதைப் போலவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினர் 78 பேர் தேர்வான நிலையில், இந்த ஆண்டு 86 பேர் தேர்வாகியுள்ளனர்.