வீடியோ ஸ்டோரி

ஜவுளிக்கடை திறப்பு விழாவில் காற்றில் பறந்த கொரோனா தடுப்பு விதிகள்

ஜவுளிக்கடை திறப்பு விழாவில் காற்றில் பறந்த கொரோனா தடுப்பு விதிகள்

கலிலுல்லா

தென்காசி மாவட்டத்தில் ஜவுளிக் கடை திறப்பு விழாவில் 50 ரூபாய்க்கு புடவைகளை வாங்க ஏராளமானோர் ஒரே நேரத்தில் திரண்டதால் கூட்டம் அலைமோதியது.

ஆலங்குளத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக்கடை, முதலில் வரும் மூவாயிரம் பேருக்கு 50 ரூபாய்க்கு புடவை என விளம்பரம் செய்திருந்தது. இதனால் புடவைகளை வாங்க பெண்கள் ஏராளமானோர் ஒரே நேரத்தில் திரண்டனர்.

கூட்டம் அலைமோதியதால், கொரோனா தடுப்பு நெறிமுறைகள் காற்றில் பறந்தன. இதனால் கொரனோ தொற்று பரவும் அபாயம் உருவானது. கொரோனா தடுப்பு வழிமுறைகள் மீறப்பட்டதால், ஜவுளிக்கடை நிர்வாகத்துக்கு ஆலங்குளம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அபராதம் விதித்தார்.