வீடியோ ஸ்டோரி

சாதிபாகுபாடு காட்டப்படுவதாக புகார்: சென்னை ஐஐடியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

சாதிபாகுபாடு காட்டப்படுவதாக புகார்: சென்னை ஐஐடியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

Veeramani

சென்னை ஐஐடியில் சாதிப் பாகுபாடு நிலவுவதாக எழுந்த புகாரை அடுத்து அந்த கல்வி நிறுவனத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நேரில் ஆய்வு மேற்கொண்டது.

சென்னை ஐஐடியில் சாதிப் பாகுபாடு நிலவுவதாக பகிரங்கமாக தெரிவித்த உதவி பேராசிரியர் விபின், அண்மையில் தமது பதவியை ராஜினாமா செய்தார். 2019ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தது முதல் சமூக அறிவியல் துறையில் சாதிரீதியான பாகுபாடுகளை அதிகம் அனுபவித்து வருவதாகவும், இதற்கு உயர் பதவியில் இருக்கும் சிலரே காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதால், முறையான புகார் அளிக்கப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என ஐஐடி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை ஐஐடியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹேல்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்தவித பாகுபாடும் பார்ப்பதில்லை என ஐஐடி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

சாதி ரீதியிலான புகார்களை நேரடியாக தம்மிடம் தெரிவிக்கலாம் எனவும், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு இருப்பதாக அங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியை வசந்தா கந்தசாமியும் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார்.