வீடியோ ஸ்டோரி

மானுட பற்றும் மனிதாபிமானமுமே எனது ரத்த ஓட்டமாக அமையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மானுட பற்றும் மனிதாபிமானமுமே எனது ரத்த ஓட்டமாக அமையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Sinekadhara

தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமூக நீதி நாள் அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சி வரவேற்றுள்ளது.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார். நாடு முழுவதும் சமூக நீதி பரவ தந்தை பெரியார் அளித்த அடித்தளமே காரணம் என்றும், பெரியாரின் செயல்கள் குறித்து பேசவேண்டுமென்றால் அவையை 10 நாட்கள் ஒத்திவைத்துவிட்டுத்தான் பேச வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். யாரும் எழுத தயங்கியதை எழுதியவர் என்றும், யாரும் பேச தயங்கியதைப் பேசியவர் என்றும் தந்தை பெரியாருக்கு முதலமைச்சர் புகழாரம் சூட்டினார். பெரியார் அறிவியல்பூர்வமாக கேள்வி கேட்டார்; அவரின் சுயமரியாதை சிந்தனையால் தமிழகமே சுயமரியாதை பெற்றதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். பெரியாரைப் போற்றும் வகையில் அவர் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என்றும் அன்றைய தினத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி உறுதிமொழி எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சமூக நீதி நாள் அறிவிப்பை கடவுள் நம்பிக்கையோடு இருக்கும் பாரதிய ஜனதா கட்சி வரவேற்பதாக, அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேரவையில் தெரிவித்தார்.