சிங்காரச்சென்னை திட்டத்தின்கீழ் சென்னை கிண்டி கத்திப்பாராவில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற சதுக்கத்தை மக்களின் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணிக்கிறார்.
ரூ.14.50 கோடியில் கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் இன்று திறக்கப்பட உள்ளது. சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின்கீழ் சதுக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உணவுக் கூடங்கள், பூங்காக்கள், வணிக வளாகம், உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ் உயிர் எழுத்துக்களின் வடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.