வீடியோ ஸ்டோரி

5 ஆண்டு பம்பர் டூ பம்பர் முறையிலான காப்பீட்டைக் கட்டாயமாக்கிய உத்தரவு ரத்து

5 ஆண்டு பம்பர் டூ பம்பர் முறையிலான காப்பீட்டைக் கட்டாயமாக்கிய உத்தரவு ரத்து

Sinekadhara

புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் முறையிலான காப்பீட்டைக் கட்டாயமாக்கிய தனது உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.

செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கான சுற்றறிக்கையை போக்குவரத்து துறையும் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இம்மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் காப்பீடு செய்யவேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தும் சூழ்நிலை இல்லை எனவும், தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெறுவதாகவும் நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பயணிகள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு விபத்து இழப்பீட்டில் உரிய திருத்தங்களை, மத்திய அரசு கொண்டுவரும் என்று நம்பிக்கை தெரிவித்து, தமிழக அரசின் போக்குவரத்து துறை வெளியிட்ட சுற்றறிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.