தமிழ்நாட்டில் நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை. தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னை மாநகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவக்கப்பட்டுள்ளது.
கர்நாடக கடலோரப் பகுதிகள், மத்திய அரபிக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் திங்கட்கிழமை வரை அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.