வீடியோ ஸ்டோரி

2018 இல் கார் பரிசு வென்ற பாண்டி காளையை வளர்க்கும் சிறுமி

2018 இல் கார் பரிசு வென்ற பாண்டி காளையை வளர்க்கும் சிறுமி

கலிலுல்லா

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் வாடி வாசலில் சீறிப்பாய தயாராகி வருகின்றன ஜல்லிக்கட்டு காளைகள்.நாட்டு இன காளைகளுக்கு மட்டும் போட்டியில் அனுமதி என்ற அறிவிப்பு காளை வளர்ப்பவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தசிறுமியின் குரல்தான், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போரின் உணர்வு. இந்த உணர்வோடு ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்தி வருகிறார்கள் அவற்றை வளர்ப்போர். 2018ஆம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கார் பரிசு பெற்ற பாண்டி காளையை வளர்த்து வரும் 9 வயது சிறுமியான லட்சுமி ஸ்ரீ, மேலும் இரண்டு காளைகளை இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார் படுத்தி வருகிறார்.

மதுரையின் பாரம்பரியங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிக்காக தற்பொழுது முதலே ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்தி வருகின்றனர் காளை வளர்ப்பவர்கள். நாள்தோறும் 5 முதல் 6 கிலோ மீட்டர் வரை நடை பயிற்சி, நீச்சல் பயிற்சி, மண் குத்து பயிற்சி, சுவாச பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் சத்துள்ள உணவுகளையும் வழங்கி ஜல்லிக்கட்டு காளைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

பெற்ற பிள்ளைகளை போல் வளர்க்கப்பட்டு வரும் காளைகள், வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் இணையே இல்லை என்று வெள்ளந்தியாக கூறும் இவர்கள் வேறுஎந்த லாப நோக்கத்துக்கும் வளர்ப்பதில்லை என்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் தைப்பொங்கல் நாளில் அவனியாபுரத்தில் துவங்கி தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் என தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது.