மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கிடுவதற்காக செயற்கைக் கால்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாவட்டம் முழுவதும் செயற்கை கால்கள், கைகள், ஊன்றுகோல்கள் தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்க தனியார் நிறுவனத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற மதிப்பீட்டு முகாமில் 146 மாற்றுத்திறனாளிகள் தேர்வாகினர்.
இவர்களுக்காக செயற்கைக் கால், கை மற்றும் ஊன்றுகோல்கள் தயாரிக்கும் பணிகளில், அனுபவம் வாய்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரையைத் தொடர்ந்து, நெல்லை, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கும் இவர்கள் செல்ல உள்ளனர்.