advocate mohan pt desk
வீடியோ ஸ்டோரி

"நீதிமன்றத்தில் நீதிபதிகளையே எதிர்த்துப் பேசுவார் யுவராஜ்" - கோகுல்ராஜ் வழக்கறிஞர் மோகன் பேட்டி

Kaleel Rahman

இந்த வழக்கில் கோகுல்ராஜ் தரப்பில் நின்று கடைசி வரைக்கும் போராடி நீதியை பெற்றுக் கொடுத்த வழக்கறிஞர் மோகன் அவர்களின் நேர்காணலை இங்கு பார்க்கலாம்.

வழக்கமாக மேல் முறையீடு என்று வருகிறபோது தண்டனை பெற்றவர்களுக்கு ஏதாவதொரு சலுகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் அதேபோல இந்த வழக்கிலும் இருந்தது. ஆனால், நீதிமன்றம் உறுதியாக நின்று தண்டகையை உறுதி செய்துள்ளது. எந்த அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது?

gokulraj murder case

இதுபோன்ற வன்கொடுமை வழக்குகளில் நீதிமன்றம் எப்படி பார்க்க வேண்டும் என்ற முறையில் மேல்முறையீட்டு மனுமீது ஆய்வு செய்துள்ளது. மேல்முறையீடு செய்யும்போது சிஆர்பிசி 391-வது பிரிவு படி தேவைப்பட்டால் அதிகப்படியான எவிடன்ஸ் கொடுக்கலாம். அதனாலதான் இந்த வழக்கில், சுவாதியை மீண்டும் வரவழைத்து விசாரித்தது என்பதும், அர்த்தநாரீஸ்வரர் மலையை நீதிபதிகளே நேரில் சென்று பார்த்து விசாரித்ததும் ஒரு புது விசயம். உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக தான் இதையெல்லாம் செய்தார்கள். இதனால்தான் மேல்முறையீட்டில் சாதிய வன்கொடுமை தொடர்பான ஊற்றக் கண்ணை பார்க்க வேண்டும் என்ற முறையில் ஆய்வு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. இந்தியாவிலேயே இதுபோன்ற தீர்ப்பு வந்ததாக தெரியவில்லை

இந்த வழக்கில் நீதிமன்றத்தின் அணுகுமுறை உறுதியாக இருந்ததாக தெரிகிறதே?

இந்த வழக்கில் ஏற்கெனவே 100 நாட்கள் யுவராஜ் தலைமறைவாக இருந்தார். மாநில போலீசுக்கு சவால் விடும் வகையில் செயல்பட்டார். அதேபோல் நீதிமன்றத்தில் நீதிபதிகளையே எதிர்த்து பேசினார். அப்படி எதிர்த்து பேசியதால் தான் அவருடைய பிணையை ரத்து செய்தார்கள். யுவராஜ் நீதிமன்றத்துக்கு வரும்போதே சட்டையை மாற்றுவார். அண்டா அண்டாவா பிரியாணி வரும். எல்லோரையும் விட தனக்கு சூப்பர் பவர் இருப்பது போல காட்டிக் கொள்வார்.

இது தொடர்பான மேலும் தகவல்களை அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்