வீடியோ ஸ்டோரி

கென்டகியை புரட்டிப் போட்ட சூறாவளி - உயிரிழந்தோர் எண்ணிக்கை 74-ஐ தாண்டியது

கென்டகியை புரட்டிப் போட்ட சூறாவளி - உயிரிழந்தோர் எண்ணிக்கை 74-ஐ தாண்டியது

கலிலுல்லா

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தை தாக்கிய சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 74-ஐ தாண்டியுள்ளது.

மேலும் 109 பேரின் நிலை தெரியவில்லை என மாகாணத்தின் ஆளுநர் ஆண்டி பெஷீர் தெரிவித்துள்ளார். சூறாவளியால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணத்தை குறைந்தது நான்கு சூறாவளிகள் தாக்கியதாகவும் இதில் ஏற்பட்ட முழு சேதத்தை கணக்கிட பல வாரங்கள் ஆகலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

கென்டகி மாகாணத்தில் சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை பேரிடராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். கென்டகி மட்டுமல்லாது டென்ன்ஸி, இல்லினாய், மிசோரி உள்ளிட்ட மாகாணங்களிலும் சூறாவளியால் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாகாணங்களில் 14-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.