ரயில் கட்டணமாக 20 ரூபாய் அதிகமாக வசூலித்த புகார் தொடர்பான வழக்கில், 22 ஆண்டுகளாக போராடி உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றி பெற்றுள்ளார்.
மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் துங்கநாத் சதுர்வேதி என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு ரயில் பயணம் மேற்கொண்டுள்ளார் அப்போது, அவரிடம் இருந்து 20 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதனை திருப்பிக் கேட்டபோது, ரயில்வே ஊழியர் தர மறுத்துள்ளார்.
இதையடுத்து சதுர்வேதி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த விவகாரம் இறுதியாக தீர்க்கப்பட்டு அவருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கறிஞரிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 20 ரூபாயை ஆண்டுக்கு 12 சதவிகித வட்டியுடன் திருப்பித் தருமாறு ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.