டிரெண்டிங்

கள்ள ஓட்டு புகார் - 49-பி தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி

கள்ள ஓட்டு புகார் - 49-பி தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி

webteam

கள்ள ஓட்டு புகார் எதிரொலியை அடுத்து 49-பி  தேர்தல் விதிப்படி வாக்களிக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர். 

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை தொகுதியில் 8 மணி வரை வாக்குப் பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கள்ள ஓட்டுப் புகார் எழுந்தது.

நெல்லை மாவட்டம் பணகுடியில், வாக்குசாவடி எண் 48ல் மணிகண்டன் என்பவர் ஓட்டை மற்றொருவர்  கள்ள ஓட்டு போட்டுள்ளார். இதனை அறிந்த மணிகண்டனர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். புதிய தலைமுறையும் உடனடியாக செய்தி வெளியிட்டது.

புதியதலைமுறை செய்தி எதிரொலியாக, மணிகண்டனுக்கு 49-பி  தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கள்ள ஓட்டுப் புகார்களுக்கு இடையே பூத் சிலிப் இல்லாததால் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் தங்கள் வாக்கைப் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தேர்தல் ஆணையம் அறிவித்த ஆவணங்களை எடுத்துச் சென்றும் பூத்‌ சிலிப் இல்லாததால் அவர்கள் வாக்களிக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அதனைக் கண்டித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதே போல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மீனவ கிராமங்களில் ஏராளமானோரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், மீனவர்கள் அதிகாரிகளிடன் வாக்குவாதம் செய்தனர். தூத்தூர், இனயம் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச்‌ சேர்ந்த மீனவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை எனப் புகார் எழுந்தது. வாக்கு இழந்த மீனவர்கள், தேர்தல் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது