டிரெண்டிங்

ஒரே மரம் நான்கு கிளைகள்... தேனியில் அதிசய தென்னை மரம்...

ஒரே மரம் நான்கு கிளைகள்... தேனியில் அதிசய தென்னை மரம்...

kaleelrahman

தேனி அருகே ஒரே மரத்தில் 4 கிளைகளைக் கொண்ட அதிசய தென்னை மரத்தை பொதுமக்கள் வியந்து பார்த்துச் செல்கின்றனர். 


தேனி அருககே உள்ள கரட்டுபட்டியை சேர்ந்தவர் தவச்செல்வம். இதே கிராமத்தில் இவருக்கு சொந்தமான தென்னை தோப்பு உள்ளது. பெரும்பாலும் தென்னை மரத்தில் கிளைகள் இருப்பதில்லை. ஆனால், இந்த தென்னந்தோப்பில் உள்ள ஒரு மரத்தில் 4 கிளைகளைக் கொண்ட அதிசய தென்னை மரம் உள்ளது.

20 அடி உயரமுள்ள இந்த தென்னை மரம் ஆரம்பத்தில் மற்ற மரங்களை போன்று வளர்ந்து வந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மரத்தில் இருந்து தனியாக ஒரு கிளை வளரத் தொடங்கியது. 


இதனைத்தொடர்ந்து அந்த கிளை மரத்திலும் காய்கள் காய்க்க தொடங்கிய நிலையில் அந்த கிளைக்கு எதிர்புறத்தில் மற்றொரு கிளையும், அதனைத்தொடர்ந்து மற்றொரு கிளை என ஒரே மரத்தில் 4 கிளைகள் வளர்ந்துள்ளது. இப்போது இந்த மரம் அதிசய மரமாக காட்சியளிக்கிறது.

துரத்தில் இருந்து பார்ப்பதற்கு சூலாயுதம் போல் காட்சியளிக்கும் இந்த மரத்தில் உள்ள நான்கு கிளைகளிலும் அதிக அளவிலான காய்கள் காய்த்து வருகின்றன. இந்த நிலையில் 4 மரத்திற்கு தேவையான உரம், நுண்ணுயிர்கள், மற்றும் தண்ணீர் ஆகியவை இந்த ஒரே மரத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த அதிசய தென்னை மரத்தை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் செல்கின்றனர்.