டிரெண்டிங்

துணை முதல்வர் பரப்புரையில் கலந்துகொள்ள பெண்களுக்கு பணம்?

துணை முதல்வர் பரப்புரையில் கலந்துகொள்ள பெண்களுக்கு பணம்?

webteam

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அதிமுக பரப்புரையில் கலந்துகொள்ள பெண்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார். 

அப்போது, பேசிய பன்னீர்செல்வம், திமுக ஆட்சியில் தான் வன்முறை தலைவிரித்தாடியதாகவும், நில அபகரிப்பு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும் வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் உள்ள 15 லட்சம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றம் செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

இதனிடையே பரப்புரையில் கலந்துகொள்ள அப்பகுதி பெண்களுக்கு அரசு பள்ளியில் வைத்து அதிமுக சார்பில் பணம் வழங்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பறக்கும் படையினர் அங்கு ஆய்வு நடத்தினர். அப்போது பெண்களுக்கு டோக்கனாக வழங்கப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.