டிரெண்டிங்

மிடில் கிளாஸ் காதலனை எப்படி மாத்துறது? - கோராவில் ஐடியா கேட்ட காதலி!

மிடில் கிளாஸ் காதலனை எப்படி மாத்துறது? - கோராவில் ஐடியா கேட்ட காதலி!

JananiGovindhan

(கோப்பு புகைப்படம்)

காதல் உறவில் இருப்பவர்கள் தங்களது இணையர் குறித்து போடும் பல பதிவுகள் சமூக வலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வரிசையில் Quora தளத்தில் பெண் ஒருவர் தனது காதலன் பற்றி பகிர்ந்திருந்த பதிவுதான் ட்விட்டரில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது.

தனது காதலனின் செயல்களை எப்படி பணக்காரர்களைபோல மாற்றுவது எனக் கேட்டு கோரா தளத்தில் பதிவிட்டது நெட்டிசன்களிடையே எரிச்சலையும் முகம் சுழிப்பையுமே உண்டாக்கியிருக்கிறது.

அந்த பதிவில், “என்னுடைய காதலன் சாதாரண நடுத்தர வர்க்க குடும்பத்தில் இருந்து வந்தவர். நல்ல சம்பளத்தில் நல்ல பதவியில் தற்போது வேலை பார்த்து வந்தாலும் அவர் தனக்கு நிகரான ஆட்களோடு அளவலாகாமல் ரிக்‌ஷாகாரர்களோடும், ஓட்டலில் வெயிட்டரோடும், கார் ஓட்டும் டிரைவர்களோடும் ரொம்பவே நெருங்கி பழகுகிறார்.

சாலையோரத்தில் இருக்கும் டீக்கடையில்தான் டீ குடிக்கிறார். இப்படியெல்லாம் செய்யும் என்னுடைய காதலனை எப்படி மார்டனாக கிளாஸை சேர்ந்தவரை போல மாற்றுவது?” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்டைதான் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. இதனைக் கண்ட ட்விட்டர் வாசிகள் பலரும் என்ன மாதிரியான நினைப்பு இது என அந்த பெண்ணை சாடியே பதிவிட்டிருக்கிறார்கள்.

இன்னும் சிலர் இந்த பெண்ணை காதலிப்பதை விட்டுவிடுங்கள் என்றும், இப்படியான நல்ல குணம் கொண்ட நபர் உங்களுக்கு ஏற்றவர் இல்லை என அந்த பெண் குறித்தும் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.