டிரெண்டிங்

ஊரடங்கு; வேலையில்லை; வாடகை தர பணம் இல்லை - கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் விபரீத முடிவு

webteam

ஊரடங்கு, வேலை இல்லை, வாடகை தர பணம் இல்லை என்ற காரணத்தால் வறுமையால் வாடிய பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர், சுவாமி நகரை சேர்ந்தவர் கல்பனா(30). இவர் கடந்த ஒரு வருடமாக கணவரை பிரிந்து தனது தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு காரணமாக பணிக்கு செல்ல முடியாமல், வருமானம் இன்றி தவித்து வந்துள்ளார். வாடகையும் தர முடியாத நிலையில் வறுமையின் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற பீர்க்கன்கரணை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.