டிரெண்டிங்

ஜோஸ் பட்லர் பலவீனத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனக்கு சாதகமாக்குமா?

ஜோஸ் பட்லர் பலவீனத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனக்கு சாதகமாக்குமா?

webteam

ஐபிஎல் தொடரில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சந்திக்க உள்ளது. லெக் ஸ்பின்னர்களுக்கு எதிரான ஜோஸ் பட்லரின் பவவீனத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எப்படிப் பயன்படுத்தப் போகிறது என்பதில் தான் இன்றைய ஆட்ட வியூகமே அமைந்துள்ளது.

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் இந்த ஐபிஎல் சீசனின் 5வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. SRH க்கு எதிராக பட்லர் அவரது முந்தைய எட்டு இன்னிங்ஸ்களில் 94.81 ஸ்ட்ரைக் ரேட்டில் 73 ரன்கள் குவித்துள்ளார்.  பொதுவாக, லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடுவது பட்லருக்கு கடினமாக இருக்கும். லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக பட்லரின் ஸ்டிரைக் ரேட் மற்றவர்களுக்கு எதிரானதை விட மிக குறைவாக உள்ளது. 32 இன்னிங்ஸ்களில், அவர் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக 127.2 ஸ்ட்ரைக் ரேட்டில் 173 பந்துகளில் 220 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் அவர் 11 முறை ஆட்டமிழந்துள்ளார்.

பட்லர் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக பவுண்டரிகளை அடிக்க அதிக நேரம் எடுக்கிறார். பட்லருக்கு நெருக்கடி கொடுக்க ஷ்ரேயாஸ் கோபால் மற்றும் அப்துல் சமத் மீது சன்ரைசர்ஸ் கவனம் செலுத்தக்கூடும். பட்லர் நிலைபெற்று ஆடிவிட்டால், ராஜஸ்தானின் ஸ்கோர் 200ஐ தொட்டு நிற்கும் என்பதால் அவர் விக்கெட்டை முதலில் சர்ரைசர்ஸ் குறிவைக்கும். இவர்கள் தவிர ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம், ரொமாரியோ ஷெப்பர்ட், வாஷிங்டன் சுந்தர், எஸ்ஆர்ஹெச்., படிக்கல் ஆகியோர் ராஜஸ்தானுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இவை அனைத்தையும் விட அணியின் கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சன் எடுக்கும் முடிவுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச ஆடும் லெவன்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் பாடிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நாதன் கவுல்டர்-நைல், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட்

அனுபவம் வாய்ந்த கேன் வில்லியம்சன் தலைமையில் சன்ரைசர்ஸ் விளையாட உள்ளது. நிக்கோலஸ் பூரான், ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா என பேட்டர்கள் இருந்தாலும் சன்ரைசர்ஸ் அதிகமாக நம்பியுள்ளது எப்போதும் போல பவுலர்களைத் தான். வேகத்திற்கு உம்ரான் மாலிக், யார்க்கருக்கு நடராஜன், பவர்பிளே & டெத் ஓவர்களுக்கு வாஷிங்டன் சுந்தர், இது தவிர புவனேஷ்வர் குமார் என மிகப் பலமான பவுலிங் யூனிட் சன்ரைசர்ஸ்க்கு அசுர பலம். இவர்களுக்கு சரியாக பவுலிங் ரொட்டேஷன் செய்து எதிரணி ரன் குவிப்பதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு வில்லியம்சனிடம் உள்ளது. சரியாக கிளிக் ஆகும் ப்ட்சத்தில் 120 - 140 ரன்களுக்குள் எளிதாக ராஜஸ்தானை சுருட்டிவிட வாய்ப்பு அதிகம். அவ்வளவுதான் எளிதாக இலக்கை முதல் வெற்றியை பதிவு செய்துவிடும் சன்ரைசர்ஸ். இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு துவங்கும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உத்தேச  விளையாடும் லெவன்: அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, கேன் வில்லியம்சன் (கேப்டன்) , ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்) அப்துல் சமத், ரொமாரியோ ஷெப்பர்ட், வாஷிண்டன் சுந்தர், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார், டி நடராஜன்

-முத்துகிருஷ்ணன்