டிரெண்டிங்

குடியிருப்பை இடித்து சேதப்படுத்திய காட்டுயானைகள்: வனத்துக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை

kaleelrahman

வால்பாறையில் தேயிலை திட்டம் குடியிருப்பை காட்டுயானைகள் இடித்து சேதப்படுத்தியது பொதுமக்கள் யானைகளை விரட்டி அடித்தனர்.


கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்றிரவு வால்பாறை அருகே சின்கோனா எஸ்டேட் பகுதியில் கமலா என்பவருடைய குடியிருப்பை 4 காட்டு யானைகள் ஜன்னல் கதவு சமையலறை போன்றவைகளை இடித்து உள்ளிருந்த பொருட்களை சேதப்படுத்தியது.


இந்நிலையில் வீட்டில் தற்போது யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் யானைகள் வீட்டை உடைக்கும் சத்தத்தை கேட்டு பட்டாசுகளை வெடித்து அப்பகுதியிலிருந்து யானைகளை விரட்டினர் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.