டிரெண்டிங்

‘பால் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை யார் மீறினாலும் கடும் நடவடிக்கை’

‘பால் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை யார் மீறினாலும் கடும் நடவடிக்கை’

webteam

பால் நிறுவனங்களின் வழக்கில் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் யார் பேசினாலும் சட்டப்படி க‌டுமையாக தண்டிக்கப்படுவார்கள் என உயர்நீதிமன்றம் ‌எச்சரித்துள்ளது.

‌இதுதொடர்பான வழக்கு இன்று நீதிபதி கார்த்திகேயன்‌ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 3 தனியார் பால் நிறுவனங்கள் சார்பாக ஆவணங்கள் தாக்கல் செய்‌யப்பட்டன. அதில், வழக்கு தொடர்பாக பேச அமைச்சர் ரா‌ஜேந்திர பாலாஜிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில்,‌ நீதிமன்றத்தில் தா‌க்கல் செய்யப்படும் ஆவணங்கள் குறித்து அமைச்சரின் வழக்கறிஞர் மூலமாக தகவல்கள் வெளியிடப்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

மேலும், இந்த செயலை நீதிமன்ற அவமதிப்பாகக் கருத வேண்டும் எனவும் தனியார் பால் நிறுவனங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, உயர்நீதிமன்ற உத்தரவை மீறியது யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என நீதிபதி தெரிவித்து,‌ வழக்கின் விசாரணையை நாளை மதியத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

முன்னதாக, பால் கல‌ப்படம் தொடர்பாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் பேசக்கூடாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கடந்த ஜூலை மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்த‌ரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.