டிரெண்டிங்

காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியா? - அடுத்தடுத்த திருப்பங்கள்

காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியா? - அடுத்தடுத்த திருப்பங்கள்

rajakannan

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளும் பிடிபி கட்சிக்கான ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டதால் அங்கு ஆளுநர் ஆட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

காஷ்மீரில் அடுத்த என்ன?

1. காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகள் ஆதரவு அளித்தால் மெஹபூபாவின் மக்கள் ஜனநாயகக் கட்சி நிலையான ஆட்சி அமைக்கலாம். ஆனால், பிடிபி கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் கூறிவிட்டது. 

2. பிடிபி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி சில சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம்.

3. இவை இல்லையென்றால், காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தால் பிடிபி மைனாரிட்டி ஆட்சியை நடத்த வாய்ப்புள்ளது.

4. எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன் வராவிட்டால், சட்டசபை சஸ்பெண்ட் ஆகும். காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைமுறைக்கு வரும்.

காஷ்மீர் சட்டசபை நிலவரம்:-

மொத்தம் - 87 இடங்கள்
பிடிபி    - 28
பாஜக    - 25
தேசிய மாநாட்டு கட்சி  - 15
காங்கிரஸ்- 12
மற்றவை - 7

இதில், பாஜகவும், தேசிய மாநாட்டு கட்சியும் ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளன.