ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டத்தினால் மட்டும் தான் மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியும் என்றால் போராட்டமும் நடக்கும் என்றார்.
கமல் பேசுகையில், “ஹைட்ரோகார்பன் கார்பன் திட்டத்தை, எப்படி எதிர்போமோ அப்படி எதிர்ப்போம். சாலை மறியலும், மக்களுக்கு இடையூறு தருவது மட்டுமே போராட்டம் அல்ல. சட்டத்துக்கு உட்பட்டு, மக்களுக்கு இடையூன்றி நல்ல மாற்றங்களை கொண்டு வர முடியும். அதனை சோம்பல் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. எங்களுடைய வியூகங்கள் சற்றே வித்தியாசமாக இருக்கும். தேவைப்பட்டால் போராட்டங்களை நடத்துவோம்” என்றார்.