டிரெண்டிங்

இந்தியை திணித்தால் மாபெரும் போராட்டம் நடத்துவோம் : ஸ்டாலின்

இந்தியை திணித்தால் மாபெரும் போராட்டம் நடத்துவோம் : ஸ்டாலின்

webteam

தமிழகத்தில் இந்தி‌ மொழி திணிக்கப்பட்டால் தமிழர்க‌ள் அனைவரும் ஒன்றிணைந்து போராடும் சூழல் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது, ஹிந்தியை அலுவல் மொழியாக கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அப்படி அலுவல் மொழியாக கொண்டுவந்தால் மாபெரும் போராட்டம் திமுக சார்பில் நடத்தப்படும். தமிழகத்தில் நடைபெற்று வரும் குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணை கோரி வலியுறுத்தி வருகிறோம். சிறையில் சசிகலா விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக வெளியான விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் வளர்ச்சியின் ஒவ்வொரு அம்சங்களிலும் தமிழகம் தொடர்ந்து கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதை சரி செய்ய மாநில அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் செய்யத் தவறியதால் திமுக சார்பில் நீர்நிலைகள் தூர்வாரப்படுகிறது, நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் அரசு முழுமையாக ஈடுபடவில்லை என்பதே உண்மை. அனைத்துத் துறைகளிலும் ஊழல் என கமல்ஹாசன் குற்றம்சாட்டியது உண்மை. மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்ட விவகாரத்தில் முதல்வரிடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.