டிரெண்டிங்

கொரோனாவை வைத்து குழப்ப பார்க்கிறார்கள்; நாங்கள் அஞ்சமாட்டோம் - பிரேமலதா விஜயகாந்த்

கொரோனாவை வைத்து குழப்ப பார்க்கிறார்கள்; நாங்கள் அஞ்சமாட்டோம் - பிரேமலதா விஜயகாந்த்

kaleelrahman

"கொரோனாவை வைத்து குழப்ப பார்க்கிறார்கள். நாங்க பனங்காட்டு நரிகள் சலசலப்புக்கு அஞ்சமாட்டோம்" என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளரும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் தீவிர பரப்புரை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பிரேமலதாவின் சகோதரரும் தேமுதிக துணைச் செயலாளருமான எல்கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த், கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை ஆய்வாளர் பரிசோதனை அழைப்பு விடுத்தார். நான் பரப்புரையில் இருக்கிறேன் என பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல், உணவு இடைவேளையில் தாம் தங்கியிருக்கும் இடத்தில் பரிசோதனை செய்ய வேண்டும் எனக்கூறி பரப்புரையை தொடர்ந்தார்.

இதனால் சுகாதாரத்துறை அதிகாரிக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கட்சித் தொண்டர்களுடன் பரப்புரையை முடித்துவிட்டு பிரேமலதா தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா மாதிரிகளை எடுத்தனர். மேலும் அவருடன் பரப்புரையில் ஈடுபட்ட ஓட்டுநர், உதவியாளர் கட்சி பொறுப்பாளர்களிடம் சோதனை செய்தனர். இதனால் அங்கு சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கொரோனா ஆய்வு முடிவுகள் 5 மணி நேரத்தில் வந்துவிடும். ஆய்வு முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பிரச்சாரத்திற்கு போகவேண்டாம் எனவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர். ஆனால் அதனை மீறிய பிரேமலதா, தொண்டர்களுடன் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாலை முதல் இரவு வரை பிரச்சாரம் செய்தார்.

அப்போது தொண்டர்களிடையே பேசும்போது, கடமையை செய்வோம் கடவுள் நமக்கு வழிவகுப்பார். சும்மா இவங்க பயமுறுத்துதல் செய்கிறார்கள். எனக்கு ஒன்றும் இல்லை. நான் நன்றாக உள்ளேன். நெகட்டிவ் என முடிவு வரும் என்று நாங்க பயந்தவங்க கிடையாது. சும்மா குழப்ப பாக்குறாங்க. நம்பல்லாம் பனங்காட்டு நரிகள் இந்த சலசலப்புக்கு அஞ்சமாட்டோம் என பேசினார்.