இன்னும் நிறைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி.தினகரன் “ கூட்டணி தொடர்பாக நிறைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். கூட்டணி முழு வடிவம் பெற்ற பிறகு வெளியில் சொல்கிறோம்” என தெரிவித்தார்