டிரெண்டிங்

‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்தால் ஆவேசமான மம்தா

rajakannan

பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்த மம்தா பானர்ஜி, தனக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டவர்களை நோக்கி காரில் இருந்து இறங்கி பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நைஹடி பகுதியில் நடைபெறும் தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது பாதுகாப்பு வாகனங்களுக்கு முன்பாக சிலர் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். காரில் இருந்து கொண்டே இதனை கவனித்த மம்தா பொறுமையிழந்தார். 

காரில் இருந்து இறங்கி வந்த அவர், முழக்கமிட்டவர்களை நோக்கி சென்றார். மம்தா காரில் இருந்து கீழே இறங்கிய உடன் அங்கு லேசான பதட்டம் ஏற்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “இவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள். பாஜகவினர். அவர்கள் அனைவரும் கிரிமினல்கள். என்னை தகாத வார்த்தைகளில் பேசினார்கள். அவர்கள் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை” என்று ஆவேசத்துடன் பேசினார். 

மம்தா பானர்ஜி இதுபோன்று நடந்து கொள்வது முதன்முறை அல்ல. இதற்கு முன்பும் இதேபோல் காரில் இருந்து கீழே இறங்கி தனக்கு எதிராக முழக்கமிட்டவர்களை நோக்கி சென்றுள்ளார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரியங்கா காந்தியும் இதேபோல் நடந்து கொண்டார்.