மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 2ஆவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 11 மணி வரை சுமார் 28.2 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
மணிப்பூர் சட்டப்பேரவைக்கான 60 தொகுதிகளில் முதற்கட்டமாக 38 தொகுதிகளுக்கு கடந்த 28ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று 6 மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்காக 1,247 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 2 பெண்கள் உட்பட 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற உள்ள நிலையில், முதல் 2 மணி நேரத்தில் சுமார் 11 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இரு கட்டங்களிலும் பதிவான வாக்குகள் வரும் 10ஆம் தேதி எண்ணப்படுகின்றன.