சென்னை மாநகராட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும் என்பதைப் பார்க்கலாம்.
1. நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சரியாக நாளை காலை 8 மணிக்கு தொடங்கும்.
2. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படும். யாருக்கு வாக்கு என்பதை வேட்பாளர்கள் அல்லது முகவர்களிடம் காண்பித்த பிறகே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்
3. தபால் வாக்குகள் முடிந்த பிறகு ஸ்டார்ங் ரூமில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்குள் எடுத்து வரப்படும்
4. வார்டு வாரியாக பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள் & முகவர்கள் முன்னிலையில் சீல் அகற்றப்படும்.
5. வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகளும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் காட்டப்படும் எண்ணிக்கையும் சரியாக இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படும்
6. சென்னை மாநகராட்சியில் மண்டத்திற்கு ஒரு வாக்கு எண்ணிக்கை மையம் என மொத்தமாக 15 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது
7. வாக்கு எண்ணிக்கை மையத்தில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வார்டுக்கு இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு உள்ளது.
8. சென்னையில் மொத்தமாக உள்ள 200 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததும் உடனுக்குடன் முடிவுகளை அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டம்
9. கொரனா பரவல் காலம் என்பதால் அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்
10. வேட்பாளர்களின் தலைமை முகவர்கள் மட்டும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது
11. முகவர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்புசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கொரனா நெகட்டிவ் சான்றிதழ் கையில் வைத்திருக்க வேண்டும்
12. தபால் வாக்குகளில் தொடங்கி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை அனைத்து நடவடிக்கைகளும் சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்