டிரெண்டிங்

சுயேட்சை வேட்பாளரை வெற்றி பெற வைப்பேன்: விஷால் சூளுரை

சுயேட்சை வேட்பாளரை வெற்றி பெற வைப்பேன்: விஷால் சூளுரை

Rasus

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஒருவரை வெற்றி பெற வைப்பேன் என நடிகர் விஷால் சூளுரைத்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் மொத்தமாக 72 மனுக்கள் ஏற்கப்பட்டன. விஷால் வேட்புமனு முதலில் நிராகரிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின் தனது மனு ஏற்கப்பட்டுவிட்டதாக விஷால் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பு தந்துள்ளது என்றும், தேர்தல் களத்தில் சந்திக்கலாம் எனவும் தெரிவித்தார். ஆனால் இறுதியில் விஷால் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக நள்ளிரவு 11 மணியளவில் அறிவித்தார்.

இதுகுறித்து விஷால் கூறும்போது, “வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் கூறியது வீடியோவாக என்னிடம் உள்ளது. வேட்பு மனுவை முன்மொழிந்தவரின் வீட்டிற்கே சென்று அவர்களை மிரட்டியுள்ளனர். என்ன நடந்தது என்பதை தேர்தல் நடத்தும் அலுவலர்தான் தெரிவிக்க வேண்டும். படத்தில் நடக்கும் காட்சிகளைப்போல் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பங்கள் ஏற்பட்டன. இத்தனை சிக்கல்கள் இருக்கும் என நினைக்கவில்லை. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் இதுதான் கதியா..? எனக்கே இந்த கதி என்றால், மற்றவர்களின் நிலை தான்என்ன..? சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவரை வெற்றி பெற வைப்பேன். இதுபோன்று இனி நடைபெறக் கூடாது என்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். நான் போட்டியிடக்கூடாது என முன்னதாகவே முடிவு செய்துவிட்டு வேட்புமனு நிராகரிப்பட்டிருக்கிறது” என்றார்.