டிரெண்டிங்

”ரயில்வேயின் சேவை தேவை...” பயணிகள் மீது பாய்ச்சி அடிக்கும் பிளாட்ஃபார்ம் ஷவர்! Viral Video

”ரயில்வேயின் சேவை தேவை...” பயணிகள் மீது பாய்ச்சி அடிக்கும் பிளாட்ஃபார்ம் ஷவர்! Viral Video

JananiGovindhan

நாட்டிலேயே தினசரி கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தக் கூடிய போக்குவரத்தாக இருப்பது ரயில் சேவைதான். இப்படியான போக்குவரத்து சேவையை பேணி காப்பது அந்த துறையின் தலையாய கடைமைகளில் ஒன்றே. இருப்பினும் ரயில் சேவையில் ஏதேனும் பிரச்னை வந்த வண்ணமே இருப்பதாக தொடர்ந்து பயணிகளால் குற்றஞ்சாட்டப்பட்டு வருவதும் வாடிக்கையாகி உள்ளது.

ஆனால், அந்த வலியுறுத்தல்களும், குற்றச்சாட்டுகளும் ரயில்வே நிர்வாகங்களுக்கு சென்றடைகிறதா என்பது பெரிதும் கேள்விக் குறியாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் வெறும் வாய் வார்த்தையாக சொல்லிக்கொண்டே இருந்தால் சரிப்பட்டு வராது என மக்கள் பலரும் தங்களது உள்ளக்குமுறல்களையும், அத்தியாவசிய தேவைகளையும் சமூக வலைதளங்கள் வாயிலாக பதிவிட்டு வைரலாக்கி அதன் மூலம் தீர்வு காண தொடங்கியிருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்தியாவின் அடையாளம் தெரியாத புறநகர் ரயில் நிலையம் ஒன்றில் பயணிகள் மூலம் ஏதோ நீர்வீழ்ச்சியை போல குழாயில் இருந்து தானாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நிகழ்வு குறித்த வீடியோதான் தற்போது ட்விட்டர் பக்கத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

Abhy என்ற ட்விட்டர் பயனர் பகிர்ந்திருக்கும் அந்த வீடியோவில், “உங்களுக்கான சேவையில் இந்தியன் ரயில்வே” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவில், ரயில் நிலைய நடைமேடையில் இருக்கும் குழாயில் இருந்து தண்ணீர் ரயிலில் வரும் பயணிகள் மழைச்சாரல் போலவும், ஷவரை போலவும் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.

இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும், “இந்தியாவில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களின் கதி இதுதான்” என்றும், “தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை வீடியோவும், ஃபோட்டோவும் எடுக்கும் நேரத்தில் அதனை சரிசெய்ய எதாவது முயன்றிருக்கலாம்” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.