டிரெண்டிங்

கைவினை பொருட்கள் தயாரிப்பு... 4வது முறையாக கின்னஸ் சாதனை படைத்த பெண்கள்.!

கைவினை பொருட்கள் தயாரிப்பு... 4வது முறையாக கின்னஸ் சாதனை படைத்த பெண்கள்.!

kaleelrahman

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 300 பெண்கள் ஒன்றிணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் பொது மக்களுக்கு தேவையான 66,158 கைவினை பொருட்களை தயாரித்து 4வது முறையாக உலக கின்னஸ் சாதனை படைத்து சாதித்துள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பெத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதா அழகர்சாமி. இவர், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான 66,158 கைவினை பொருட்களை உற்பத்தி செய்த 300 கிராம பெண்களில் ஒருவர். இந்த பெண்கள் 4வது முறையாக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.


கடந்த 2019 ஆண்டு சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 300 பெண்கள் ஒன்றிணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் பொது மக்களுக்கு தேவையான 66,158 கைவினை பொருட்களை தயாரித்து 4வது முறையாக உலக கின்னஸ் சாதனை படைத்து சாதித்துள்ளனர்.


இந்த பெண்களை பொதுமக்கள் நேரில் சென்று பாராட்டி வருகின்றனர் . அதில் ஒருவரான சுதா அழகர்சாமி சொந்த ஊருக்கு வருகை தந்தார். அவரது வருகையை  கிராமத்தில் உள்ள பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.