டிரெண்டிங்

புஜாரா ஆட்டம் வீண்: சௌராஷ்டிராவை வீழ்த்தி கர்நாடக அணி சாம்பியன்

புஜாரா ஆட்டம் வீண்: சௌராஷ்டிராவை வீழ்த்தி கர்நாடக அணி சாம்பியன்

rajakannan

விஜய் ஹசாரே கிரிக்கெட் கோப்பையை சௌராஷ்டிரா அணியை வீழ்த்தி கர்நாடகா வென்றுள்ளது.

இந்தியாவின் முக்கிய உள்ளூர் கிரிக்கெட் போட்டியான விஜய் ஹசாரே தொடரின் இறுதிப் போட்டியில் கர்நாடகா அணி, செளராஷ்டிரா அணிகள் மோதின. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இந்தப் போட்டி நடைபெற்றது. 

டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி, 50 ஓவர் முடிவில் 253 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 90 ரன்கள் எடுத்தார். ரவிகுமார் சமர்த் 48 ரன்னும், பவன் தேஷ்பாண்டே 49 ரன்னும் ஷ்ரேயாஸ் கோபால் 31 ரன்னும் எடுத்தனர். 

254 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய, சவுராஷ்டிரா அணி 46.3 ஓவரில் 212 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. சவுஷ்டிரா அணியில், புஜாரா மட்டும் 127 பந்தில் 94 ரன்கள் குவித்து சதத்தை தவறவிட்டார். இதனால், கர்நாடகா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. கர்நாடக அணி சார்பில் கௌதம் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.