டிரெண்டிங்

‘மக்கள் தேடிப்பிடித்து வாக்களித்திருக்கிறார்கள்’- திருமாவளவன் மகிழ்ச்சி

‘மக்கள் தேடிப்பிடித்து வாக்களித்திருக்கிறார்கள்’- திருமாவளவன் மகிழ்ச்சி

JustinDurai

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மொத்தம் 93 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது. தொடக்கத்தில் சின்னம், வார்டு ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் இழுபறி நீடித்த நிலையில் சுமூக பேச்சுவார்த்தைகளை அடுத்து திமுகவுடன் கூட்டணி அமைத்து தனிச் சின்னத்தில் விசிக போட்டியிட்டது.

மாநகராட்சிகளைப் பொறுத்தவரையில் 15 மாநகராட்சிகளில் மொத்தம் 27 வார்டுகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது. அவற்றில் 16 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக பெருநகர சென்னை மாநகராட்சியில் போட்டியிட்ட 6 வார்டுகளில் 4 வார்டுகளில் வெற்றி கண்டுள்ளது. நகராட்சிகளைப் பொறுத்தவரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 71 வார்டுகளில் போட்டியிட்டு 26 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பேரூராட்சிகளைப் பொறுத்தவரையில் 126 வார்டுகளில் போட்டியிட்டு அவற்றில் 51 வார்டுகளில் வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 93 இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றியை ருசித்துள்ளது.

‌‌‌‌‌‌‌

சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்ட போதும், நகர்ப்புற தேர்தலில் தென்னை மரச் சின்னத்தில் போட்டியிட்ட போதும் மக்கள் தேடிப் பிடித்து வாக்களித்திருப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி சரியான திசையில் பயணிப்பதை உணர்த்துவதாக திருமாவளவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அதே வார்டு... அதே வாக்குகள் - குலுக்கல் முறை பரிதாபங்கள்.. வெற்றியும்.. தோல்வியும்