டிரெண்டிங்

‘எடையை குறையுங்கள்’ - காங்கிரஸ் எம்.பி ரேணுகாவுக்கு வெங்கையா நாயுடு அட்வைஸ்

‘எடையை குறையுங்கள்’ - காங்கிரஸ் எம்.பி ரேணுகாவுக்கு வெங்கையா நாயுடு அட்வைஸ்

rajakannan

எடையை குறையுங்கள் என்று காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரிக்கு துணை குடியரசு தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு ஆலோசனை கூறினார். 

நாடாளுமன்றத்தில் அவ்வவ்போது பல ஸ்வாரஸ்யமான சம்பவங்கள் நடப்பதுண்டு. இதில் ரேணுகா சவுத்ரி தொடர்பாக பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது. இன்றுடன் அவரது பதவி காலம் நிறைவடைகிறது. இன்றும் ரேணுகா சவுத்ரிக்கும், வெங்கையா நாயுடுவுக்கும் இடையிலான உரையாடல் மாநிலங்களவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

ரேணுகா : வெங்கையா நாயுடுவுக்கு மிகவும் எடை குறைவாக இருந்த நாளில் இருந்து என்னை தெரியும். நிறைய பேர் என்னுடைய எடை குறித்து கவலைப்படுகிறார்கள். ஆனால், இந்த பணியில் உடலின் எடை என்பது ஒரு விஷயமல்ல.

வெங்கையா : என்னுடைய எளிமையான வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் எடையை குறையுங்கள். அதேபோல், உங்கள் கட்சியின் எடைய அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். 

ரேணுகா : காங்கிரஸ் கட்சி நன்றாகவே இருக்கிறது

இந்த உரையாடலின் போது அவையில் சிரிப்பலை எழுந்தது. முன்னதாக பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய போது இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. 

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த போது,. ரேணுகா சவுத்ரி சத்தமாக சிரித்தார். இதைக்கேட்ட அனைத்து எம்.பி.க்களும் அதிர்ச்சி அடைந்தனர். கோபமடைந்த வெங்கயா நாயுடு, ரேணுகா சவுத்ரியை கண்டித்து, 'ஏதாவது பிரச்சினை என்றால் மருத்துவரிடம் செல்லுங்கள்' என்றார். பின்னர் மீண்டும் பேசிய மோடி, ‘ராமாயணம் தொடருக்கு பின்னர் இப்படி ஒரு சிரிப்பை இப்பொழுதுதான் கேட்கிறோம் என்று பதிலடி கொடுத்தார். இதைக் கேட்டு அனைத்து எம்.பி.க்களும் சிரித்தனர். ராமயணத்தில் சூர்ப்பனகையின் கோரமான சிரிப்பை சுட்டிக் காட்டி மோடி பேசியதாக காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்தனர்.