டிரெண்டிங்

முத்தலாக் மசோதா: மாநிலங்களவையில் காரசார வாக்குவாதம்

முத்தலாக் மசோதா: மாநிலங்களவையில் காரசார வாக்குவாதம்

rajakannan

முத்தலாக் மசோதா தொடர்பாக பாஜக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.

‘முத்தலாக்’ பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா’வை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது. மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, காங்கிரஸ் கட்சி சில திருத்தங்களை கொண்டு வந்தது. ஆனால், அவற்றின் மீது ஓட்டெடுப்பு நடத்த வற்புறுத்தவில்லை. எதிர்க்கட்சிகளின் திருத்தங்களை புறக்கணித்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, மாநிலங்களைவை இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை அப்படியே நிறைவேற்ற முயற்சிக்காமல், மாநிலங்களவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதனால், மாநிலங்களவையில் கடும் அமளி நிலவியது. மத்திய மந்திரியும் மாநிலங்களவை எம்.பி.யுமான ஸ்மிரிதி ரானிக்கும், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. ஓபிரையானுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பெண்களுக்கு அதிகாரமளிக்க தைரியம் இல்லை என்று பாஜக வெளிப்படுத்தி வருவதாக ஓபிரையான் கூறினார். இதனால் மாநிலங்களவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. ஆகவே மசோதா நிறைவேற்றப்படவில்லை.