டிரெண்டிங்

கொரிய தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்ற ஷாநவாஸ் - இந்திய தூதருடன் சந்திப்பு

கொரிய தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்ற ஷாநவாஸ் - இந்திய தூதருடன் சந்திப்பு

rajakannan

கொரிய தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்ற ஆளூர் ஷா நவாஸ், அந்நாட்டிற்கான இந்திய தூதரையும் சந்தித்துள்ளார்.

கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க தென்கொரியாவுக்கு சென்றிருந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ். கியாங்கி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தமிழ் கலை இலக்கிய விழாவில் பங்கேற்று, கணினித் தமிழ் வேந்தர் மா.ஆண்டோ பீட்டர் குறித்த நினைவுச் சொற்பொழிவை நேற்று அவர் ஆற்றினார். அங்கு ஆளூர் ஷாநவாஸ்க்கு 'சமூகப் பண்பாளர்' விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், கொரியாவுக்கான இந்திய தூதர், ஸ்ரீப்ரியா ரங்கநாதனை ஆளுநர் ஷாநவாஸ் இன்று சந்தித்தார். இதுகுறித்து தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், “கொரியாவுக்கான இந்திய தூதர், ஸ்ரீப்ரியா ரங்கநாதன் அவர்களை இன்று சந்தித்தேன். கொரியா இந்தியா உறவு குறித்தும், கொரிய மக்களின் மொழி, பண்பாடு, வாழ்வியலில் தமிழின் தாக்கம் குறித்தும், தூதரகம் மூலம் செய்யவேண்டிய மக்கள் பணிகள் குறித்தெல்லாம் சுமார் 1 மணி நேரம் நீடித்தது உரையாடல். அவரது எளிய அணுகுமுறையும் கனிவும் மனதை ஈர்த்தது. சந்திப்பின் போது, கொரியா தமிழ்ச் சங்க துணைச் செயலாளர் முனைவர் ஆரோக்கிய ராஜ் உடனிருந்தார்” என குறிப்பிட்டுள்ளார்.