டிரெண்டிங்

“கோவையில் யாரும் பதற்றத்தை உருவாக்கவில்லை” - வானதி சீனிவாசன்

“கோவையில் யாரும் பதற்றத்தை உருவாக்கவில்லை” - வானதி சீனிவாசன்

Sinekadhara

கோவையில் யாரும் பதற்றத்தை உருவாக்கவில்லை என கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற இருசக்கர வாகன பேரணி மற்றும் பரப்புரை கூட்டத்தில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது பாஜகவினர் டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைகளை அடைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வர்த்தகர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருந்தார்.

இதில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வகாப் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அளித்த புகாரில், அமைதியாக உள்ள கோவையில் வீணான பிரச்னைகளை தூண்டுவதாகவும், சம்பந்தப்பட்ட வேட்பாளர் வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் புகார் மனுவில் கோரியிருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், கோவையில் யாரும் பதற்றத்தை உருவாக்கவில்லை என கூறியுள்ளார். மேலும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகையின்போது நடந்த பேரணியில் தவறு எங்கே நடந்தது என விசாரிக்க வேண்டும் என்று கூறிய அவர், கோவை மாநகரம் எத்தனையோ கலவரங்களை சந்தித்துள்ளது; நிறையபேர் சிறையில் உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.