டிரெண்டிங்

நிற்காமல் சென்ற வேன்: துரத்திப்பிடித்த பறக்கும் படை அதிகாரிகள்; ரூ. 2.57 லட்சம் பறிமுதல்

நிற்காமல் சென்ற வேன்: துரத்திப்பிடித்த பறக்கும் படை அதிகாரிகள்; ரூ. 2.57 லட்சம் பறிமுதல்

kaleelrahman

குளித்தலை அருகே மருதூர் சுங்கச்சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது திருச்சி நோக்கி சென்ற வேன் நிற்காமல் சென்றதால், ஐந்து கிலோ மீட்டர் தூரம் துரத்திப் பிடித்து சோதனை செய்ததில் 2 லட்சத்து 57 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கரூர் - திருச்சி செல்லும் புறவழிச்சாலை மருதூர் சுங்கச்சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது அவ்வழியாக வந்த வேனை நிறுத்தியுள்ளனர். ஆனால் வேன் நிற்காமல் சென்றதால், பறக்கும் படையினர் பின் தொடர்ந்து 5 கிலோ மீட்டர் தூரம் துரத்தி வேனை நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில், வேன் ஓட்டிவந்த நெரூரைச் சேர்ந்த பெருமாள் என்பவர் தஞ்சாவூருக்கு வாத்து வாங்க செல்வதாக கூறியுள்ளார்.

பின்னர், இவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ. 2.57 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தத் தொகை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் குளித்தலை வட்டாட்சியருமான கலியமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.