டிரெண்டிங்

3 இன்ச் நீட்டிப்பதற்காக ரூ.60 லட்சம் கடன் வாங்கிய இன்ஜினியர்.. இறுதியில் நடந்த சுவாரஸ்யம்!

3 இன்ச் நீட்டிப்பதற்காக ரூ.60 லட்சம் கடன் வாங்கிய இன்ஜினியர்.. இறுதியில் நடந்த சுவாரஸ்யம்!

JananiGovindhan

உடலின் தோற்றங்களை மாற்றி அமைத்துக் கொள்வதற்கான காஸ்மோ சர்ஜரிகள் பலவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. விருப்பமான உருவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக செய்துக் கொள்ளும் அறுவை சிகிச்சை காலப்போக்கில் நொந்துக்கொள்ளவேச் செய்கின்றன என அதனை செய்துக் கொண்டவர்களே புலம்பது தொடர்பான பல செய்திகளை அறிந்திருப்போம்.

அந்த வகையில்தான் அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த நெட்வொர்க் இன்ஜினியர் ஒருவர் தன்னுடைய உயரத்தை அதிகப்படுத்துவதற்காக வங்கியில் கடன் வாங்கி அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர் தற்போது பெரும் கடன்காரராக மாறியியிருக்கிறார் என GQ magazine -ல் வெளியான செய்தி மூலம் அறிய முடிகிறது.

40 வயதை உடைய ஜான் லவ்டேல் என்பவர் பென்சில்வேனியாவில் உள்ள நிறுவனத்தில் நெட்வொர்க் இன்ஜினியராக இருக்கிறார். இயற்கையாகவே இவர் 5 அடி எட்டரை அங்குலம் உயரம் கொண்டவராக இருந்தாலும் தான் இன்னும் உயரமாக இருக்க வேண்டும் என்ற ஆசை அவரிடம் எப்போதும் இருந்து வந்திருக்கிறது.

ஏனெனில் உயரமானவர்களுக்காக இந்த உலகம் எப்போதும் வளைந்துக் கொடுக்கும் என்பதை கண்டிருக்கிறேன், அதனால்தான் நானும் உயரமாக வேண்டும் என எண்ணுகிறேன் என லவ்டேல் கூறியிருக்கிறார்.

ஆகையால் தன்னுடைய உயரத்தை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என எண்ணி இண்டெர்நெட்டில் அது குறித்து தேடிக் கொண்டிருக்கும்போது லாஸ் வேகாஸில் உள்ள க்ளினிக்கில் கால்களை நீட்டிக்கும் காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்ற விளம்பரத்தை ஜான் லவ்டேல் கண்டிருக்கிறார்.

இதனையடுத்து அந்த க்ளினிக்கில் தனது உயரத்தை நீட்டிப்பதற்கான சிகிச்சை மேற்கொள்ள அணுகியிருக்கிறார். மாற்றியமைக்கக் கூடிய உயர அளவை பொறுத்து 70 ஆயிரம் டாலர் முதல் ஒன்றரை லட்சம் டாலர் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக எல்லாரும் 3 இன்ச் அளவே தேர்வு செய்வதால் ஜான் லவ்டேலும் அதையே தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இதற்காக ஆன்லைன் மூலம் வங்கியில் 75 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது 60  லட்சம் கடன் பெற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டிருக்கிறார். இந்த சர்ஜரியால் லவ்டேல் திருப்தியாக இருந்தாலும் வங்கியில் வாங்கிய கடனை அடைக்க அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாதாமாதம் 1200 டாலர் செலவிட வேண்டியிருக்கிறது. தோராயமாக 95 ஆயிரம் ரூபாய்.

தன்னுடைய உயரம் அதிகரிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள லவ்டேல், ”நீங்கள் உயரமாக இருக்கும்போது மக்கள் உங்களை வித்தியாசமாகப் பார்ப்பார்கள். நான் பொய் சொல்லவில்லை. நான் ஜிம்முக்கு செல்லும் போது அனைவரது பார்வையும் என்மீதுதான் இருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.