டிரெண்டிங்

குழந்தை பெற்ற பெண்ணை எப்படி வன்கொடுமை செய்ய முடியும்: பாஜக எம்.எல்.ஏ கொச்சை பேச்சு

குழந்தை பெற்ற பெண்ணை எப்படி வன்கொடுமை செய்ய முடியும்: பாஜக எம்.எல்.ஏ கொச்சை பேச்சு

rajakannan

திருமணமாகி மூன்று குழந்தைகள் பெற்ற பெண்ணை எப்படி பாலியல் வன்கொடுமை செய்ய முடியும் என்று பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து சுரேந்திர சிங் கூறுகையில் “நான் உளவியல் அடிப்படையில் தான் பேசுகிறேன். 3 குழந்தைகள் பெற்ற பிறகு எப்படி ஒரு பெண்ணை ரேப் செய்ய முடியும். அதற்கு சாத்தியமில்லை. இது குல்தீப் செங்கர் மீது சதி செய்யப்பட்டுகிறது. அவரது தந்தை மீது சிலர் தாக்குதல் நடத்தியிருக்கலாம். அவர்கள் பாலியல் குற்றச்சாட்டை நம்ப முடியாது” என்றார்.

தன்னை பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் பாலியல் வன்புணர்வு செய்தார் என்று ஒருவருடத்திற்கு முன்பு பெண் ஒருவர் குற்றச்சாட்டு வைத்தார். இதுகுறித்து பலரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். இதனால் அந்த பெண் குடும்பத்தோடு உத்தர பிரதேச முதல்வர் யோகியின் வீடு முன்பு சென்று தீ குளிக்க முயன்றார். இதுதொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக யோகி ஆதித்யநாத் அரசு சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட்டது. எம்.எல்.ஏ குல்தீப் சகோதரர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் குல்தீப் சிங் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சக எம்.எல்.ஏ குல்தீப் சிங்கை பாதுகாக்கும் பொருட்டு மற்றொரு பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் இப்படி ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார்.