டிரெண்டிங்

“இலங்கை அரசின் கைக்கூலி வசந்தகுமார்” - பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

“இலங்கை அரசின் கைக்கூலி வசந்தகுமார்” - பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

rajakannan

ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்சேயின் வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், இலங்கை அரசின் கைக்கூலி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோவில் பகுதியிலிருந்து இன்று திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை துவங்கிய பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்சேயின் வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், இலங்கை அரசின் கைக்கூலி என்றார். 

அவர், இலங்கை அரசிற்கு ஆதரவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமையவுள்ள துறைமுகத்தை தடுப்பேன் என கூறியுள்ளார். எதிர்கால தேர்தல்களில் கை சின்னம் வழங்கக்கூடாது எனவும் அது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் எனவும் கூறினார். வசந்த் அன்ட்கோ நிறுவனம் தேர்தல் அலுவலகமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர், அந்த நிறுவனத்தை மூடுவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.